புத்தளம் அல் - மின்ஹாஜ் முஸ்லிம் மகா வித்தியாலய ஏழு மாணவர்கள் சிதம்பரா கணிதப் போட்டியில் வெற்றி பெற்று சாதனை!.
(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்)
சிதம்பரா கணிதப் போட்டி நிகழ்வில் பு/அல்மின்ஹாஜ் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் ஏழு மாணவர்கள் வெற்றி பெற்று, பாடசாலையின் பெருமையை மேலும் உயர்த்தியுள்ளனர். இது அவர்களது உழைப்பு, ஆசிரியர்களின் வழிகாட்டல் மற்றும் பெற்றோர்களின் ஊக்கமளிக்கும் பங்களிப்பின் விளைவாகும் என பாடசாலையின் அதிபர் எஸ். எச். தமீம் அன்ஸார் தெரிவித்தார்.
வெற்றி பெற்ற மாணவர்கள் வருமாறு:
முஹம்மத் றிஸ்வான் பாத்திமா நஹா - தரம்: 06
முஹம்மத் றிபாஸ் அயாஸ் அஹ்மத் - தரம்: 06
முஹம்மத் பஸீல் முஹம்மத் – தரம்: 08
சம்சுதீன் பாத்திமா ஸல்மா – தரம்: 09
அஸ்லக் பாத்திமா ஹம்தா – தரம்: 09
ஔபர் பாத்திமா அம்ரா – தரம்: 10
முஹம்மத் றிப்கான் றிப்தா – தரம்: 10
இம்மாணவர்களை பாடசாலை நிர்வாகம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம். இது போன்ற சாதனைகள் மற்ற மாணவர்களுக்கும் ஊக்கம் மற்றும் வழிகாட்டியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை எனவும் அதிபர் மேலும் தெரிவித்தார்.
No comments