புத்தளம் கணமூலை முஸ்லிம் மகா வித்தியாலய ஏழு மாணவர்கள் சிதம்பரா கணித போட்டியில் சாதனை
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
அகில இலங்கை ரீதியில் இடம்பெற்ற சிதம்பரா கணித போட்டியில் புத்தளம் கணமூலை முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களான தரம் 05 எம்.எப் அனீகா, தரம் 06 எம்.எம்.எப் சம்லா, தரம் 07 எம்.என்.எம் ஆசீக், தரம் 08 எப்.எப் றுஸ்தா , தரம் 09 எம் எப் அம்ரா, எம்.ஐ இல்மா, தரம் 10 எம்.எப்.ஏ சம்ரா ஆகிய ஏழு மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலையின் அதிபர் பீ.எம் முஸ்னி தெரிவித்தார்.
மேலும் இவர்களுக்கான பரிசளிப்பு வைபவம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருமண மண்டபத்தில் இடம்பெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments