புத்தளம் பாரம்பரிய விளையாட்டு போட்டிகளும், பாரம்பரிய உணவு திருவிழாவும்.
எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் பாரம்பரிய விளையாட்டு கழகம் மூன்றாவது வருடமாக ஏற்பாடு செய்துள்ள பாரம்பரிய விளையாட்டு போட்டிகளும், பாரம்பரிய உணவு திருவிழாவும் 04 ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
புத்தளம் நகரின் பாரம்பரிய விளையாட்டு போட்டிகளை மழுங்கடிக்க விடாமல் உயிர்ப்பிக்கும் தோரணையில் புத்தளம் பாரம்பரிய விளையாட்டு கழகம் வருடந்தோறும் இந்த போட்டிகளை நடாத்தி வருகின்றது.
கயிறு இழுத்தல், பலூன் ஊதுதல், கதிரை சுற்றுதல்,
தொப்பி மாற்றுதல், மூட்டை அடித்தல், முட்டி உடைத்தல், சாக்கு ஓட்டம், சைக்கிள் ஓட்டம்,
நண்டு ஓட்டம்,
ஆள் மாற்றி ஓட்டம், டயர் ஓட்டுதல், டயர் புரட்டுதல்,
டயர் உருட்டுதல், நெடு ஓட்டம் மற்றும் வினோத உடை ஆகிய போட்டிகள் இடம்பெறவுள்ளன.
போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுபவர்களுக்கு பணப்பரிசுகளுடன் தங்க ஆபரணங்களும் பரிசாக வழங்கப்படவுள்ளன.
புத்தளம் பாரம்பரிய விளையாட்டு கழக தலைவரும், புத்தளம் மாநகர சபை உறுப்பினருமான இப்லால் அமீனின் தலைமையில் பாரம்பரிய விளையாட்டு கழக உறுப்பினர்கள் இதற்கான விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
No comments