JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி பிரதேச சபைத் தவிசாளரின் முதல் விஜயம் நுரைச்சோலை பொருளாதார மத்திய நிலையத்திற்கு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி பிரதேச சபைத் தவிசாளராக தெரிவு  செய்யப்பட்ட ஏ.எஸ்.எம் றிகாஸ் தனது முதல் கள விஜயமாக நுரைச்சோலையில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையத்திற்கு செவ்வாய்க்கிழமை (17) மேற்கொண்டார்.


இதன்போது கருத்து தெரிவித்த தவிசாளர் ஏ.எஸ்.எம் றிகாஸ்;


தனக்க்கும் நுரைச்சோலை பொருளாதார மத்திய நிலையத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாகவும் அதன் அடிப்படையில் தான் கற்பிட்டி பிரதேச சபைத் தவிசாளராக பதவி ஏற்ற உடன் எனது முதல் கள விஜயமாக இதனை தேர்ந்தெடுத்ததாகவும் இந்த நுரைச்சோலை பொருளாதார மத்திய நிலையத்தில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றது என்பதை சுட்டிக் காட்டியதுடன் இக் குறைபாடுகள் சம்மந்தமாக சம்மந்தப்பட்ட அமைச்சுக்களுடன் ஏற்கனவே கலந்துரையாடியுள்ளதாகவும் அவற்றுக்கான நிதிகளும் பெறப்படும் எனவும் வெகு விரைவில் மேற்படி நுரைச்சோலை பொருளாதார மத்திய நிலையம் சகல வசதிகளையும் கொண்டதாக அபிவிருத்தி செய்யப்படும் எனவும் மேலும் தெரிவித்தார்.


மேற்படி விஜயத்தின் போது கற்பிட்டி பிரதேச சபையின் செயலாளரும் சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.







Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال