JobVibe.lk - Sri Lanka Job Portal

சிலாபம் மீன் சந்தையின் அவல நிலை - மக்கள் விசனம்

 -உடப்பு  - க.மகாதேவன்-

சிலாபம் நகர சபைக்குட்பட்ட “பொது மீன் சந்தை” பல வகைகளில் திருத்தப்பட வேண்டிய நிலையில் உள்ளதாக சிலாபம் மீனவர்களும், பொது மக்களும் கருத்துக்களை முன் வைத்துள்ளனர். அண்மையில் சிலாபம் மீன் சந்தைக்கு சென்ற வேளை பல வகையான குறைபாடுகளை அங்கே காணக்கூடியதாக இருந்தது. 


முக்கியமாக பொது மக்கள் மீன்களை கொள்வனவு செய்யும் போது,வயதான ஒரு அம்மையார் தரையில் வழுக்கி விழுந்த சந்தர்ப்பத்தையும் காணக்கூடியதாக இருந்தது. கட்டடத்தின் மேல் கூரை பல பகுதிகளில் உடைந்த நிலையில் விழும் தருவாயில் காணப்படுகின்றது. இது நீண்ட நாட்களாக திருத்தப்பட வில்லை.இதனை நிவர்த்தி செய்து தருமாறு மக்கள்  கோரிக்கை விடுக்கின்றனர்.


இதேவேளை மீனின் கழிவுகளும் ஒழுங்காக செல்வதற்கு  வடிவமைக்கப்படவில்லை என்று பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.








Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال