JobVibe.lk - Sri Lanka Job Portal

இலவச சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி – உறுதி (Deed) குறித்த அடிப்படை அறிவு

புத்தளம் பொதுமக்களுக்கு /

 மொழி: தமிழ்

இந்த நிகழ்ச்சியின் நோக்கம், பொதுமக்களுக்கு உறுதியின் அடிப்படை சட்ட அறிவை வழங்குவதாகும். இன்று பலர் நிலம் வாங்கும் போது அல்லது சொத்துகள் குறித்த ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது, உறுதியின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளாமலேயே செயற்படுகிறார்கள். இதனால் போலி ஆவணங்கள் மற்றும் மோசடிகளால் பாதிக்கப்படுவதற்கான அபாயம் அதிகரிக்கிறது.


இந்த நிகழ்ச்சியில் நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது:


உறுதி என்றால் என்ன?


ஒரு சொத்தின் உரிமையை நிரூபிக்க உறுதி ஏன் அவசியம்?


இலங்கையில் பயன்படுத்தப்படும் முக்கிய உறுதி வகைகள்


சரியான உறுதியை அடையாளம் காண எளிய முறைகள்


போலி உறுதிகளை எவ்வாறு சந்தேகிக்கலாம்?


உறுதியொன்று கையெழுத்து செய்யும் முன் கவனிக்க வேண்டியவை


சந்தேகம் இருந்தால் யாரை அணுகலாம்?


பொதுமக்கள் செய்துள்ள தவறுகள் மற்றும் அவற்றைத் தவிர்க்க வழிகாட்டல்


🔹 இது ஒரு சட்டக் கல்வி வகுப்பு அல்ல.

🔹 இது பொதுமக்களுக்கு எளிய தமிழில் வழங்கப்படும் விழிப்புணர்வு நிகழ்ச்சி.


📌 இந்த நிகழ்ச்சி வழக்கறிஞர்கள், சட்ட மாணவர்கள் மற்றும் சட்டதுறை வல்லுநர்களுக்கானது அல்ல.


இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதன் மூலம் நீங்கள்:


முக்கியமான கேள்விகளை கேட்க தைரியம் பெறுவீர்கள்


சந்தேகத்திற்குரிய உறுதிகளை அடையாளம் காணலாம்


உங்கள் சொத்து உரிமைகளை பாதுகாக்க அறிவு பெறுவீர்கள்.


நதீஹா அப்பாஸ்  Attorney  at - Law



Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال