புத்தளம் லீக்கின் நிர்வாகிகள் அனுசரணையாளர் பர்வீன் ராஜாவுடன் சந்திப்பு.
எம்.யூ.எம். சனூன்
புத்தளம் உதைப்பந்தாட்ட லீக்கின் புதிய நிர்வாகக் குழுவின் முதலாவது தொடரான, அணிக்கு ஒன்பது பேர் கொண்ட உதைபந்தாட்ட தொடர் 21ம் திகதி கல்பிட்டி அல் அக்சா பாடசாலை மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த தொடரின் பிரதான அனுசரணையாளரான புத்தளம் பர்வீன் ராஜா பவுண்டேசன் உரிமையாளரும், புத்தளம் மாநகர சபை உறுப்பினருமான பர்வீன் ராஜா அவர்களை சந்தித்த லீக் நிர்வாகக் குழு முதல் பரிசான 50,000 பணத்தை பெற்றுக் கொண்டதோடு இந்த தொடரின் கிண்ணங்களையும் அவரிடம் காண்பித்து மகிழ்ந்தனர்.
புத்தளம் காற்பந்தாட்ட லீக் தலைவர் முஹம்மது யமீன் தலைமையிலான லீக்கின் அங்கத்தவர்களும் இதில் பங்கேற்றனர்.
No comments