JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் மாநகர சபை புதிய மேயருக்கும் பிரதி மேயருக்கும் புத்தளம் ஜம்இய்யத்துல் உலமா வாழ்த்து.

எம்.யூ.எம்.சனூன்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக்கிளை உறுப்பினர்கள் புத்தளம் மாநகர சபையின் முதலாவது மேயராக தெரிவு செய்யப்பட்ட பொறியியலாளர் ரின்சாத் அஹ்மத் அவர்களையும் முதலாவது பிரதி மேயராக தெரிவு செய்யப்பட்ட நுஸ்கி நிசார் அவர்களையும்  மாநகர சபை காரியாலயத்தில் (17) சந்தித்து வாழ்த்து தெரிவித்த பின் கலந்துரையாடினர்.


புத்தளத்தில் நடைபெறும் அனைத்து அபிவிருத்திகளுக்கும் ஜம்இய்யா ஒத்துழைப்பு வழங்கும் என்றும் ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகர கிளை தலைவர் அஷ்ஷெய்க் ஜிப்னாஸ் அல் மிஸ்பாஹி இதன் போது அவர்களிடம் தெரிவித்தார்.


ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகர கிளை உறுப்பினர்களும் இதில் பங்கேற்றிருந்தனர்.







Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال