சுப்ரீம் லீடர் மரணித்தால் ஈரானிய இஸ்லாமிய ஆட்சி சரிந்துவிடுமா ?
சுப்ரீம் லீடரை கொலை செய்தால் ஈரானின் இன்றைய இஸ்லாமிய ஆட்சியை கவிழ்த்துவிட்டு தங்களுக்கு வாசியான ஆட்சியை அமைத்துவிடலாம் என்பது நடைமுறைக்கு சாத்தியமற்ற ஒன்றாகும்.
ஈராக்கில் சதாமை அகற்றி தங்களுக்கு ஏற்ற அடிமை அரசை அமைத்ததுபோன்று நினைத்துள்ளனர். ஈரானின் ஆட்சியானது தனி மனிதரின் கரங்களில் அமைந்த ஆட்சியல்ல. அங்கு பலமான இஸ்லாமிய கட்டமைப்புக்கள் உள்ளது.
ஆட்சியாளர்கள்மீது அவ்வப்போது சிலருக்கு அதிருப்தி ஏற்பட்டாலும், மதத் தலைவர் (இமாம்) என்றவகையில் சுப்ரீம் லீடரை அனைத்து மக்களும் தங்களது உயிரிலும் மேலாக நேசிக்கின்றனர்.
சுப்ரீம் லீடரை எவ்வாறு தெரிவு செய்கின்றார்கள் ?
88 பேர்கொண்ட இஸ்லாமிய அறிஞர்கள் (முஜ்தஹித்கள்) சபை உள்ளது (Assembly of Experts). இதனை தலைவருக்கான வல்லுநர் சபை என்றும் கூறுவார்கள்.
இந்த சபைக்கு சுப்ரீம் லீடரை தெரிவு செய்வது மட்டுமல்ல, நீக்குவதற்கான அதிகாரமும் உள்ளது. இந்த சபைக்கு தெரிவு செய்யபடுபவர்கள் இஸ்லாமிய சட்டத்தில் நிபுணத்துவம் (ஃபிக்ஹ்), நீதி, அரசியல் அறிவு மற்றும் மக்களின் ஆதரவு உள்ளவர்களாக இருத்தல் வேண்டும் என்பது அடிப்படை தகுதிகளாகும்.
இந்த உறுப்பினர்கள் எட்டு வருடங்களுக்கு ஒருமுறை மக்களால் தேர்தலில் தெரிவு செய்யப்படுகின்றார்கள். ஆனால் இவர்களை தேர்தலில் போட்டியிட Guardian Council யின் ஒப்புதல் தேவை.
இவைகள் எல்லாம் ஈரானிய அரசியல் அமைப்பு சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தனது மரணத்திற்கு பின்பு மூன்று பேர்களின் பெயர்களை குறிப்பிட்டு அவர்களில் ஒருவரை அடுத்த சுப்ரீம் லீடராக தெரிவு செய்யுமாறு இன்றைய சுப்ரீம் லீடர் அலி கொமைனியால் அறிவிப்பு செய்யப்பட்டதானது நாட்டின் இன்றைய போர் சூழ்நிலை கருதி அவ்வாறு தனது சிபாரிசினை அறிவித்திருக்கலாம். ஆனாலும் இந்த மூன்று பேரும் குறித்த 88 பேர் கொண்ட இஸ்லாமிய அறிஞர்கள் சபைக்கு வெளியே இருக்க முடியாது.
ரசூலுல்லாஹ்வின் மறைவிற்கு பின்பு ஹலீபாவை தேர்வு செய்வதில் பல குழப்பங்கள் ஏற்பட்டது. இவ்வாறானதொரு குழப்பம் தனது மறைவுக்கு பின்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக உமர் (ரலி) அவர்கள் ஆறு நபித் தோழர்களின் பெயர்களை குறிப்பிட்டு தனது மறைவிற்கு பின்பு இந்த ஆறு பேர்களில் ஒருவரை அடுத்த ஹலீபாவாக தேர்வு செய்யும்படி அறிவித்தார்கள்.
அதுபோலவே தனது மரணத்திற்கு பின்பு அடுத்த சுப்ரீம் லீடரை தெரிவு செய்வதில் குழப்பம் ஏற்பட்டு அது ஏகாதிபத்திய சியோனிஸ்டுகளுக்கு சாதகமாக அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவே இன்றைய சுப்ரீம் லீடர் முன்னெச்சரிக்கையாக உள்ளார் என்பது தெரிகிறது.
எது எப்படி இருப்பினும் இன்றைய சுப்ரீம் லீடர் மரணித்தால், சியோனிஸ்டுக்கள் நினைப்பதுபோன்று ஈரானின் இஸ்லாமிய ஆட்சியை ஒருபோதும் மாற்றிவிட முடியாது.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
No comments