புத்தளம் பாத்திமா அஹதிய்யா மாணவிகள் முதன்முறையாக வரலாற்று சாதனை.
எம்.யூ.எம்.சனூன்
2025 இல் நடைபெற்ற அஹதிய்யா தேசிய இடைநிலைப் பரீட்சையில் புத்தளம் பாத்திமா அஹதிய்யா மாணவிகள் முதன் முறையாக பரீட்சைக்கு தோற்றி சிறந்த பெறுபேறுகளை பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.
பரீட்சைக்கு 49 மாணவிகளுள் 48 தமிழ் மூலமும் மற்றும் 01 சிங்கள மொழி மூலம் மாணவியும் தோற்றியதுடன் இதில் 47 பேர் சகல பாடங்களிலும், பிக்ஹு 100 வீதம், அஹ்லாக் 100 வீதம், ஸீரா 97.91 வீதத்திலும் சித்தி அடைந்துள்ளனர்.
மேலும் 8 பேர் 3 ஏ, 23 பேர் 2 ஏ பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
சித்தி பெற்ற சகல மாணவர்களுக்கும், குறிப்பாக அஹதிய்யாவுக்கு பிள்ளைகளை அனுப்பும் தாய்மார்களுக்கும் பாத்திமா அஹதிய்யா அதிபர் உள்ளிட்ட ஆசிரியைகள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.
No comments