ஊடகவியலாளர் புத்தளம் இர்ஷாத் ரஹ்மதுல்லா இந்தியா பயணம்.
எம்.யூ.எம்.சனூன்
இலங்கையில் வைத்து வெளியிடப்படவுள்ள தமிழ்நாடு கவிமலர்கள் பைந்தமிழ்ச் சங்க நிறுவுனரும், தலைவருமான சந்திரகலா பதிப்பகம் மற்றும் ஆதி டிரஸ்ட் உரிமையாளர் கவிஞர். ரித்து சூர்யா அவர்களின் தொகுப்பான 1000 நூல்கள் தொடர்பிலான நிகழ்வு பற்றிய கூட்டத்தில் கலந்து கொள்ளும் வகையில் தமிழ் நாட்டினை தளமாக கொண்ட த கிரியட்இந்தியா நியூஸ் ப்ரஸ் & மீடியா நிறுவனத்தின் இலங்கை பக்க பொறுப்பாசிரியர் இர்ஷாத் ரஹ்மத்துல்லா இந்தியா சென்றுள்ளார்.
வியாழக்கிழமை (19) செங்கோட்டையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.
கவி மலர்கள் பைந்தமிழ் சங்கத்தின் திருநெல்வேலி மாவட்ட தலைவர் மதிப்புறு முனைவர் வீரமைதீன் தலைமையில் இடம்பெறும் இந்த நிகழ்வில் கவி மலர்கள் பைந்தமிழ் சங்கத்தின் தலைவர் கவிஞர். ரித்து சூர்யா உள்ளிட்டவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
அத்துடன் திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை மகளிர் கல்லூரியில் இடம் பெறும் நிகழ்வில் விருந்தினராக கலந்து கொள்ளும் இர்ஷாத் ரஹ்மத்துல்லா "ஊடகமும், கல்வியும்" எனும் தலைப்பில் உரையாற்றவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments