Breaking News

கற்பிட்டி மண்டலக்குடா கிராம இளைஞர் கழகம் பதிவு செய்யும் நிகழ்வு

(கற்பிட்டி. எம் எச் எம் சியாஜ்)

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் செயற்படும் தேசிய இளைஞர் மன்றத்தின் 2025 ம் ஆண்டிற்கான கிராம மட்ட இளைஞர் கழகங்களை பதிவு செய்யும் நிகழ்வு தேசிய ரீதியில் கெனெக்ட் 2025 ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


அதன்படி கற்பிட்டி பிரதேச செயலகத்தின் மண்டலக்குடா கிராம இளைஞர் கழகமான பவர் சேர்ஜ் புதிய நிர்வாகிகள் தெரிவும்  பதிவும் கற்பிட்டி பிரதேச செயலகத்தின் இளைஞர் சேவை உத்தியோகத்தர் ஏ.ஆர் முனாஸ் தலைமையில் மண்டலக்குடாவில் இடம்பெற்றது.


இதில் கிராம உத்தியோத்தர் ஏ.எச்.எப் பர்வின், அபிவிருத்தி உத்தியோகத்தர்  எப்.சஹ்ரீயா ஆகியோர் கலந்து கொண்டனர். அதுதோடு கற்பிட்டி மண்டலக்குடா பவர் சேர்ஜ்  இளைஞர் கழகத்தின் புதிய நிர்வாகக்குழுவின் தலைவராக எம்.எஸ்.எம் சஜான், செயலாளரா எம்.எஸ்.எம்  றிகாஸ். பொருளாளராக எம்.ஜே மொஹமட், அமைப்பாளராக எம்.டீ அப்ராத், உப தலைவராக எம் எஸ் எப் சஹ்லா. உப செயலாளராக எப்.எப் பஸ்ரினா. மேலும் விளையாட்டு மற்றும் ஏனைய வெளிப்புற நடவடிக்கைகள் செயற்பாட்டாளராக எம்..ஐ இஹ்சான். கலாச்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு செயற்பாட்டாளராக. எல்.ஆர் பானு, கல்வி, பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு செயற்பாட்டாளராக எம் ஆர்.எம் மசீன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





No comments