ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து பாலஸ்தீனை மீட்பதற்கான சாத்தியமிருந்தும், முடியாமல் உள்ளது ஏன்?
இஸ்ரேலின் கேந்திர நிலைகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்களை தொடர்ந்து நடாத்துகின்ற இந்த சந்தர்ப்பத்தில் பாலஸ்தீனை சூழ உள்ள பிரதேசங்களில் பலமான மரபுப் படையணி இல்லாததுதான் பாரிய குறைபாடாக உள்ளது.
அதாவது ஹமாஸ், ஹிஸ்புல்லாஹ், சிரியாவில் நிலைகொண்டிருந்த ஈரான் ஆதரவு பெற்ற இயக்கங்கள் ஆகியன இந்த சந்தர்ப்பத்தில் பல திசைகளில் இருந்து தரைவழியாக இஸ்ரேலை நோக்கி முன்னேறி டெல்அவிவ் உட்பட இஸ்ரேலின் முக்கிய நகரங்களை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான சூழல் உள்ளது. ஆனால் அதற்கு பலமான மரபுப் படையணிகள் இல்லை.
பேஜர் தாக்குதல் மூலமாக ஹிஸ்புல்லாவின் முக்கிய தளபதிகள் தொடக்கம் அதன் தலைவர் ஹசன் நஸ்ருல்லாஹ் வரையில் கொலை செய்யப்பட்டதன் காரணமாகவும், ஆயுத விநியோக பாதை தடைப்பட்டதனாலும், தற்போதைய லெபனான் ஆட்சித் தலைவர் அமெரிக்க சார்புடையவர் என்பதனாலும் ஹிஸ்புல்லாஹ்வின் மரபு படையணியால் நகர முடியாது.
ஆக்கிரமிப்பாளர்களுடன் கெரில்லா முறையில் இடைவிடாது தொடர்ந்து போரிட்டு வருவதனால் ஹமாஸ் இயக்கம் மரபு போர் செய்யும் நிலையில் இப்போது இல்லை.
சிரியாவில் ஈரானுக்கு சார்பான பசர் அல்-அசாத்தின் ஆட்சி அகற்றப்பட்டு ஈரானுக்கு எதிரான சக்திகளின் ஆட்சி நடைபெறுவதனால், தனது ஆட்சியை பாதுகாப்பதற்காக இஸ்ரேலுக்கு எதிராக ஒரு கல்லைக்கூட சிரியாவிலிருந்து வீசுவதற்கு இன்றைய சிரிய ஆட்சித் தலைமை அனுமதிக்காது.
பலமான மரபு படையணி தற்போது இருந்திருந்தால், ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன் பிரதேசங்களுக்குள் ஊடுருவி தாக்குதல் நடாத்துவதன் மூலம் காசாவில் நடைபெறுகின்ற போரை இஸ்ரேலுக்குள் திசை திருப்பலாம்.
எனவேதான் ஈரானின் தாக்குதலை சந்தர்ப்பமாக பாவித்து ஆக்கிரமிப்பாளர்களை துடைத்தெறிந்து பாலஸ்தீன் கொடியை ஏற்றுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் பலமான மரபுப் படையணி அங்கு இல்லாததுதான் தாக்குதலின் இலக்கை முழுமைப்படுத்த முடியாமல் உள்ளது.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
Post Comment
No comments