மக்கள் வாழ்வாதார சுமையை குறைக்கும் நடவடிக்கைகள் எப்போது?
மத்திய வங்கி சமீபத்தில் வெளியிட்டுள்ள விபரணை அறிக்கையில், கடந்த 4 ஆண்டுகளில் வாழ்வுக்காச் செலவுகள் தாராளமாக உயர்ந்துள்ளமை, வருமானங்களுடன் ஒப்பிடுகையில் பாரிய விகிதத்தில் மக்கள் வாழ்க்கைச் செலவில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு அதிர்ச்சி தரும் உண்மை. அன்றாடத் தேவைகளுக்கே மக்கள் போராடும் நிலையில், அரசாங்கத்தின் மௌனம் மக்களுக்கு எதிரானது என்பதை உறுதியாக உணர்த்துகிறது.
ஐக்கிய காங்கிரஸ், மக்களின் உணர்வையும் வாழ்வாதார சிரமங்களையும் பிரதிபலித்து, அரசாங்கத்திடம் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை வலியுறுத்துகிறது:
1. மூலப்பொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையை உடனடியாக குறைக்கும் நடவடிக்கைகள்.
2. குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவித் தொகையை அதிகரித்தல்.
3. மத்திய வங்கியின் பரிந்துரைகளின்பேரில், நிதி கொள்கைகளை மக்கள் நலனை மையமாகக் கொண்டு மறுசீரமைத்தல்.
4. பொதுமக்களின் வங்கி கடன்கள் மீதான வட்டி விகிதங்களை குறைக்கும் தீர்வுகள்.
இவைகளை உடனடியாக பின்பற்றாத அரசு, மக்களுக்கு விரோதமாக செயல்படுவதாகவே எண்ணப்படும்.
எனவே, நம் நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த, அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற வலியுறுத்தலுடன், இவ்வறிக்கையை வெளியிடுகிறோம்.
சப்வான் சல்மான்
பொதுச் செயலாளர்
ஐக்கிய காங்கிரஸ்
No comments