மாகாண சபைத் தேர்தல் இந்த வருடம் சாத்தியமா?
மாகாண சபைத் தேர்தலை இந்த ஆண்டுக்குள் நடத்துவதற்கான சட்டமூலம் தயாரிக்கப்படுகிறதா?
இவ்வாறு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் அவர்களின் ஒத்திவைத்த கேள்வி இன்று மாலை நாடாளுமன்ற சபை அமர்வில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரிடம் வினவப்படும் இந்தக் கேள்விக்கு அவர் அளிக்கும் பதிலானது மாகாண சபைத் தேர்தல் இந்த வருடம் சாத்தியமா என்பதை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.
-அஸ்லம் எஸ்.மெளலானா
No comments