ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் புத்தளம் மாநகர சபையின் கௌரவ உறுப்பினராகிறார் ஷதா பாயிஸ்.
எம்.யூ.எம். சனூன்
புத்தளம் நகர சபையின் முன்னாள் தலைவரும், முன்னாள் பிரதி அமைச்சருமான மர்ஹூம் கே.ஏ. பாயிஸ் அவர்களின் புதல்வி ஷதா பாயிஸ் புத்தளம் மாநகர சபையின் உறுப்பினராக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மறைந்த தலைவராகிய மர்ஹூம் கே.ஏ.பாயிஸ் அவர்களையும் அன்னாரது குடும்பத்தையும் கௌரவிக்கும் முகமாக இந்த பதவி கட்சி சார்பாக ஷதா பாயிஸுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் புத்தளம் தொகுதி அமைப்பாளரும், புத்தளம் நகர சபையின் முன்னாள் உறுப்பினருமான ரணீஸ் பதூர்தீன் தெரிவித்தார்.
இதற்கான நியமனப் பத்திரம் வெள்ளிக்கிழமை (23) ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் புத்தளம் தொகுதி அமைப்பாளரும், முன்னாள் நகர சபை உறுப்பினருமான ரணீஸ் பதூர்தீன் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
முன்னாள் நகர பிதா கே.ஏ.பாயிஸ் மறைந்து வெள்ளிக்கிழமை (23) சரியாக 04 வருடங்கள் நிறைவடையும் நிலையில், அவரது அன்புப் புதல்வி ஷதா பாயிஸ் மாநகர சபையின் உறுப்பினராக தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
இந்நிகழ்வின் போது அஷ்ஷெய்க் சௌக்கி, மர்ஹூம் கே.ஏ.பாயிஸின் சகோதரி நிஸ்ரின் சஹானி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர் முஹம்மது கஸ்ஸாலி ஆகியோரும் உடனிருந்தனர்.
No comments