தொடர் வீதி விபத்துக்கள்: மூவர் பலி, 36 பேர் காயம்!
உடப்பு - க.மகாதேவன்
நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் ஏற்பட்ட தொடர்ச்சியான வீதி விபத்துக்களில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், குறைந்தது 36 பேர் காயமடைந்துள்ளனர்.
கொழும்பு-வெல்லவாய வீதியில் வெலியாரவில் இன்று காலை இலங்கை போக்குவரத்து சபை பஸ் ஒன்று பார ஊர்தி ஒன்றின் பின்பகுதியுடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்ததுடன், 13 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்களில் 12 பஸ் பயணிகளும், பார ஊர்தி சாரதியும் அடங்குவர். மற்றொரு சம்பவத்தில், யாக்கல-கிரின்டிவெல வீதியில் வரப்பலானவில் பஸ்ஸுடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றுமொருவர் காயமடைந்தார்.
இதேவேளை, எராவூர்-புன்னாக்குடா வீதியில் 2வது கிலோமீட்டர் தூணுக்கு அருகில் வாகனம் மோதியதில் பாதசாரி ஒருவர் காயமடைந்து உயிரிழந்தார்.
அவர் மட்டக்களப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததுடன், அவரது அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
மேலதிகமாக, நுவரெலியா, டொப்பாஸ் பகுதியில் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததில் 23 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் குருநாகல், கிரிவவுல பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
No comments