Breaking News

எதிர் தரப்பினர் உள்ளூராட்சிமன்ற சபைகளை கைப்பற்றினால் எதை சாதிக்கபோகிறார்கள் ? கடந்தகால வரலாறு.

தற்போது நடைமுறையில் உள்ள உள்ளூராட்சிமன்ற கலப்பு தேர்தல் முறையானது சிக்கல் குறைவானது என்றுதான் ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2018 தேர்தலுக்கு பின்பு எதிர்பாராத பல சிக்கல்கள் உருவானது. 


தேர்தல் பெறுபேறுகளின்படி ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 231 சபைகளையும், ஆளும் நல்லாட்சி அரசாங்கத்தின் ஐக்கிய தேசிய கட்சி 37 சபைகளையும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி 6 சபைகளையும் கைபற்றியது. 


அன்றைய தேர்தல் முடிவுகளின்படி நாட்டை ஆட்சி செய்த ஆளும் தரப்பினர் பெரும்பான்மையை பெற்றுக்கொள்ளவில்லை. மாறாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பெரும்பான்மை சபைகளை பெற்றுக் கொண்டது. 


இதனால் ஆளும் நல்லாட்சி அரசாங்கம் பதவி துறக்க வேண்டுமென்ற கோசமும் அப்போது எழுந்தது. அதுபோல் தற்போது நடைபெற உள்ள இந்த தேர்தலில் ஆளும் தேசிய மக்கள் சக்தி (NPP) பெரும்பான்மையான சபைகளை கைப்பற்ற தவறினால் ஆட்சியை துறந்து பதவி விலக வேண்டுமென்ற கோசம் எழும்பாதென்று கூற முடியாது. 


அது ஒருபுறமிருக்க, 2018 தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளை பெற்றுக்கொண்ட கட்சிகள் தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதாவது கட்சிகள் அதிகமான வாக்குகளை பெற்றுக்கொண்ட போதிலும் எதிர்தரப்பு வரிசையில் அதிகமான ஆசனங்கள் இருந்ததே இதற்கான காரணமாகும். 


ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அதிகமான சபைகளை வெற்றியீட்டிய போதிலும் அரைவாசிக்கும் அதிகமான சபைகளில் ஆட்சி அமைப்பதில் நெருக்கடிகளை எதிர்கொண்டது. இலங்கை தமிழரசு கட்சி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் இதே நெருக்கடிகளை எதிர்கொண்டது.  


அந்தவகையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கல்முனை மாநகரசபை, நிந்தவூர் பிரதேசசபை ஆகிய சபைகளை கைப்பற்றியிருந்தும் தமிழர் விடுதலை கூட்டணியின் நான்கு உறுப்பினர்களின் உதவியுடனேயே மு.கா கல்முனை மாநகர சபைகை ஆட்சி அமைத்தது. ஆனால் நிந்தவூர் பிரதேச சபையை ஸ்ரீ.ல.சு. கட்சி உறுப்பினரின் ஆதரவுடன் மக்கள் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. 


வடக்கு கிழக்கு மாகாணங்களின் உள்ளூராட்சி மன்றங்களை எப்போதும் சிறுபான்மை கட்சிகள் ஆட்சி அமைப்பது வழமை. 2018 நடைபெற்ற உள்ளூராட்சிமன்ற தேர்தலில் நாடு முழுவதிலும் ஆளும் கட்சியைவிட எதிர்க்கட்சியினரே அதிகமான சபைகளை ஆட்சியமைத்தனர். 


எதிர்கட்சியினர் ஆட்சியமைத்த சபைகளுக்கு ஆட்சியாளர்களினால் எந்தவித கட்டுப்பாடுகளும் விதிக்க முற்படவில்லை.  


விடயம் இவ்வாறு இருக்கும்போது அடுத்த ஐந்து வருட ஆட்சி அதிகாரம் NPP அரசிடம் இருக்கின்ற நிலையில், எதிர் தரப்பினர் உள்ளூராட்சி மன்றங்களை மாத்திரம் கைப்பற்றி என்ன செய்ய முடியுமென்ற பிரச்சாரமானது முட்டாள்தனமானது மட்டுமல்லாது ஜனநாயக விரோதமானது. 


முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




No comments