புத்தளம் - கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம் பெற்ற முப்பெரும் நிகழ்வுகள்!.
1.புனித ரமலான் மாதத்தில் அல்குர்ஆனை பூரணமாக ஓதி முடித்த மாணவர்கள் பாராட்டி கௌரவிப்பு!.
2.மூன்றாம் தவணைப் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்களைப் பாராட்டி "கல்வித் தாரகை" சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு!.
3.நடைபெற்று முடிந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு!.
புத்தளம் - தெற்கு கோட்டத்துக்குட்பட்ட கனமூலை முஸ்லிம் மகா வித்யாலயத்தில் முப்பெரும் நிகழ்வுகள் கடந்த (10) வியாழக்கிழமை பாடசாலையில் புதிதாக அமையப் பெற்றிருக்கும் மர்ஹும் அஷ்ஷெய்க் அரூஸ் (கபூரி) ஞாபகார்த்த கேட்போர் கூட மண்டபத்தில் பாடசாலையின் அதிபர் பீ.எம். முஸ்னி தலைமையில் இடம்பெற்றது
இந்நிகழ்வில் பாடசாலையின் உப அதிபர், பிரதி அதிபர் உட்பட ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர் எம். இஸ்வான் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
1.புனித ரமலான் மாதத்தில் அல்குர்ஆனை பூரணமாக ஓதி முடித்த மாணவர்கள் பாராட்டி கௌரவிப்பு.
கடந்த ரமலான் மாத விடுமுறையின் போது மாணவர்கள் இவ்விடுமுறையில் அல்குர்ஆனை பூரணமாக ஓதி நிறைவு செய்வோருக்கு பாடசாலையால் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்படும் என அதிபரினால் வாக்குறுதி வழங்கப்பட்டிருந்தது. அதற்கமைய புனித ரமலான் மாதத்தில் அல்குர்ஆனை பூரணமாக நிறைவு செய்த மாணவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
2.மூன்றாம் தவணைப் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்களைப் பாராட்டி "கல்வித் தாரகை" சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு!.
பாடசாலை மாணவர்களின் அடைவு மட்டத்தை அதிகரிப்பதற்காக வருடாந்தம் மூன்றாம் தவணைப் பரீட்சையில் அதிகூடியப் புள்ளிகளைப் பெற்ற மாணவர்களை பாராட்டி கௌரவிப்பதற்காக "கல்வித் தாரகை" எனும் சான்றிதழ் வழங்கப்பட்டு வருவது வழமை.
அந்த வகையில் கடந்த 2024ஆம் ஆண்டு மூன்றாம் தவணைப் பரீட்சையில் தரம் 6 - 13 வரையான மாணவர்களில் சிறந்த பெருவேறு பெற்ற மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் வகையில் "கல்வித் தாரகை எனும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
3.நடைபெற்று முடிந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு!.
கடந்த வருடம் நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கி கௌக்கப்பட்டது.
No comments