தபால் மூல வாக்களிப்புக்கு கம்பஹா மாவட்டத்தில் இருந்து 47,178 பேர் தகுதி
(ரிஹ்மி ஹக்கீம்)
2025 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலின் தபால் மூல வாக்களிப்பு இன்று (24) ஆரம்பமான நிலையில் கம்பஹா மாவட்ட செயலாளர் அலுவலகம் உள்ளிட்ட மாவட்டத்தின் ஏனைய சகல அரச நிறுவன உத்தியோகத்தர்களின் வாக்களிப்பும் இன்று ஆரம்பமானது.
தபால் மூல வாக்களிப்புக்கு கம்பஹா மாவட்டத்தில் இருந்து 47,178 பேர் தகுதி பெற்றுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு கிடைத்த 47,749 விண்ணப்பங்களில் 571 அளவில் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் லலிந்த கமகே தெரிவித்தார்.
கம்பஹா மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் லலிந்த கமகேயின் மேற்பார்வையில் கம்பஹா உதவி தேர்தல் ஆணையாளர் ரவிந்த்ர விக்ரமசிங்கவின் ஒருங்கிணைப்பில் கம்பஹா மாவட்ட தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments