Breaking News

மதுரங்குளி மீடியாவின் பரிசளிப்பு விழாவில் ஓய்வு பெற்ற அதிபர்கள் மூவர் கௌரவிப்பு

(கற்பிட்டி செய்தியாளர் எம் எச் எம் சியாஜ்))

புத்தளம் மதுரங்குளியிலிருந்து கடந்த 08 வருடங்களாக இணையதளம் ஊடாக தமிழ் பேசும் மக்களின் உரிமைக் குரலாக இயங்கி வந்த மதுரங்குளி மீடியா தற்போது "மாற்றத்தை நோக்கிய ஊடக பயணம்" எனும் தலைப்பில் இயங்கி வருகின்றது.


அந்தவகையில் மதுரங்குளி மீடியா  2025 ம் ஆண்டின் பரிசளிப்பு விழாவும், கௌரவிப்பு நிகழ்வும் அண்மையில் மதுரங்குளி டீரீம் மண்டபத்தில் நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலையின் முன்னாள் ஓய்வு பெற்ற அதிபர் என்.எம் எம் நஜீப் தலைமையில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் புத்தளம் நல்லாந்தழுவை ஆரம்ப பாடசாலையின் முன்னாள் ஓய்வு பெற்ற அதிபர் என்.எம்.எம் நஜீப் மற்றும் புத்தளம் பெருக்குவற்றான் அல் மின்ஹாஜ் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் முன்னாள் ஓய்வு பெற்ற அதிபர்களான எம்.எச்.எம் றாசிக்,  ஏ.சி நஜீமுதீன் ஆகிய மூவரும் மதுரங்குளி மீடியாவினால் பாராட்டி பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இவர்களுக்கான கௌரவிப்பு பிரதம அதிதியின் கரங்களால் இடம்பெற்றது.


இந்நிகழ்வின் பிரதம அதிதியாக முன்னாள் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் கே.எம்.எம் பைசர் மரைக்காரின் அழைப்பின் பேரில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதுயுதீன் கலந்து சிறப்பித்தமையும் குறிப்பிடத்தக்கது.











No comments