மாத்தறை மாவட்ட பட்டதாரிகள் பெருந்தோட்டத் துறை மக்கள் குரல் அமைப்புக்கிடையிலான கலந்துரையாடல்
(கற்பிட்டி செய்தியாளர் எம் எச் எம் சியாஜ்)
மாத்தறை மாவட்டத்தில் கடந்த பல வருடங்களாக (சுமார் 2014க்கு பிறகு) உயர்தர பரீட்சையிக்கு தோற்றி சிறப்பான பெறுபேறுகளை பெற்று, ஆசிரியர் உதவியாளர் நியமனத்திற்கு விண்ணப்பித்தும், இதுவரை நியமனம் பெறாதவர்கள் மற்றும் மாத்தறை மாவட்டத்தில் உள்ள பட்டதாரிகளுக்கும் பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று தெனியாயில் உள்ள சில்ட் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது
பெருந்தோட்டத் துறை மக்கள் குரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் என்டனி ஜேசுதாசன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி கலந்துரையாடலில் திட்ட பணிப்பாளர் லவீனா ஹசன்தி, தேசிய திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரான்சிஸ் ராஜன், கள முகாமையாளர் என்டன் வனத்தையா மற்றும் தொண்டர் ஆசிரியர் செல்வன். துசித ஆகியோர் கலந்து கொண்டனர்.
கல்வியாளர்கள் முகம்கொடுக்கின்ற பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்து ஆழமாக கலந்துரையாடப்பட்டதுடன் உயர்தரத்தில் சித்தியடைந்த தென் மாகாண மலையக மாணவர்களை ஆசிரியர் உதவியாளர்கள் நியமனத்திற்கு சேர்த்துக்கொள்வதற்கான செயற்திட்டங்கள் கடந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும், இடையில் அது கைவிடப்பட்டதன் காரணமாக இவர்கள் பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கின்றனர் என்பது பற்றியும் மேலும் தென் மாகாண பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறையின் காரணமாக, உயர்தர மாணவர்கள் தங்கள் பாடவிதையை தெரிவு செய்வதில் பல சிக்கல்களை சந்திப்பதாகவும், உயர்தரத்தில் சிறப்பான பெறுபேறுகளை பெற்றவர்கள் தற்போது கடைகளிலும், தோட்டங்களிலும் வேலை செய்வதாகவும் தெரிவித்தனர்.
இந்த கலந்துரையாடலின் இறுதியில், கல்வி அமைச்சருக்கு வழங்குவதற்கான மகஜரொன்று தயார் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
No comments