நாவற்காடு ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டி.
எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் கல்பிட்டி நாவற்காடு ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியானது அண்மையில் புனித சிந்தாத்திரை மாதா விளையாட்டு மைதானத்தில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது .
மோட்டார் சைக்கிள் ஊர்வலத்தினைத் தொடர்ந்து பாடசாலை மாணவர்களினால் பேண்ட் வாத்தியம் இசைக்கப்பட்டு அனைவரும் அழைத்து வரப்பட்டனர்.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புத்தளம் வலயக்கல்வி பணிமனையின் கணக்காளர் டபிள்யூ.ஏ.எம்.வி.கே.எல். வனசிங்க, சிறப்பு விருந்தினர்களாக தேத்தாப்பளைப் பங்கின் பங்குத்தந்தை அருட்பணி மைக்கல் கெனீசியஸ் அடிகளார், உதவிப் பங்குத்தந்தை அருட்பணி ஸ்டனீஸ் அடிகளார், கல்பிட்டிக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம். ஜவாத், புத்தளம் தெற்குக் கோட்ட கல்விப் பணிப்பாளர் நௌசாத் ஆகியோர் கலந்து கொண்டதுடன் அயற்பாடசாலை அதிபர்கள், பிரதி அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
அதனைத் தொடர்ந்து நிகழ்வுகள் இறைவணக்கத்துடன் ஆரம்பமாகி கொடியேற்ற நிகழ்வும் இடம்பெற்றது.
வீர வீராங்கனைகளினால் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு சத்தியப்பிரமானம் இடம்பெற்றது.
அதிபர் பா.ஜெனற்ராஜின் வரவேற்புரையை தொடர்ந்து சென்.பீடடர் மற்றும் சென்.ஜோன் ஆகிய இல்லங்களைச் சேர்ந்த மாணவர்களினால் அணி வகுப்பு மற்றும் சுவட்டு நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின.
இரண்டு இல்லங்களையும் சேர்ந்த மாணவர்களின் உடற்கல்விக் கண்காட்சியும் இடம்பெற்றது. நடைபெற்ற போட்டிகளில் சென்.பீட்டர் இல்லம் வெற்றி பெற்று வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கியது.
No comments