Breaking News

பெருந்தோட்டத் துறை மக்கள் குரல் அமைப்பின் மகளிர் தின நிகழ்வு சனிக்கிழமை தெனியாயவில்

(கற்பிட்டி செய்தியாளர் எம் எச் எம் சியாஜ்)

பெருந்தோட்டத் துறை மக்கள் குரல் அமைப்பு மற்றும் மாத்தறை மாவட்ட சிகரம் மலையக பெண்கள் சம்மேளனம் இணைந்து நடாத்த உள்ள சர்வதேச மகளிர் தின நிகழ்வு தெனியாய கொடபொல நகர மண்டபத்தில் சனிக்கிழமை (15) பெருந்தோட்டத் துறை மக்கள் குரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் என்டனி ஜேசுதாசன் தலைமையில் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.


காணி, வீடு, கல்வி மற்றும் அடிப்படை உரிமைகளை உறுதி செய்வதினூடாக மலையக பெண்களின் அபிவிருத்தியை மேம்படுத்துவோம். எனும் தொனிப் பொருளில் இடம்பெற உள்ள மகளிர் தின நிகழ்வின் பிரதம அதிதியாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் திருமதி சரோஜா போல்ராஜ் கலந்து சிறப்பிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.




No comments