Breaking News

சிலாபம் - முன்னேஸ்வரம் தேர் உற்சவம்

  (உடப்பு - க.மகாதேவன்)

வரலாற்று சிறப்பு வாய்ந்த பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான சிலாபம், முன்னேஸ்வரம் ஶ்ரீ வடிவாம்பிகா சமேத ஶ்ரீ முன்னைநாதஸ்சுவாமி ஆலயத்தின் வருடாந்த பிரமோற்சவ விஞ்ஞாபன உற்சவத்தில் இரதோற்சவம் புதன்கிழமை (12) நடைபெற்றது.


அம்பாள் பக்தர்களின் அரோஹரா கோஷம் முழங்க உள்வீதி வலம் வந்து, பின்னர் இரதத்தில் எழுந்தருளினார். அத்துடன் தீபாரணைகள் காட்டப்பட்டு, அரோஹரா…அரோஹரா.. ஒலியுடன் இரதம் வீதியில் இழுக்கப்பட்டது.


இதன் போது, பெருந்திரலான பக்த அடியார்கள் கலந்து கொண்டு முன்னைநாதஸ்சுவாமியின் அருளைப் பெற்றுக் கொண்டனர்.











No comments