Breaking News

புத்தளம் பாலாவியில் லங்கா டைல்ஸ் விற்பனை நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் கொழும்பு வீதி பாலாவியில் லங்கா டைல்ஸ் விற்பனை நிலையம் வெள்ளிக்கிழமை (14) மாலை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.


இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்களை தொடராக ஏற்படுத்தி வரும் புத்தளம் டெக்னோ குறூப் நிறுவனத்தின் பொறுப்பாளர்களான அல்ஹாஜ் ஏ.யூ.சாஹுல் ஹமீதின் புதல்வர்களான எஸ்.எச்.எம். ஜப்ரிஸ், எஸ்.எச்.எம். ஹாரிஸ், எஸ்.எச்.எம்.ருவைஸ், எஸ்.எச்.எம்.ரிஹாஸ், எஸ்.எச்.எம்.ஹாபி ஆகியோரின் கூட்டு முயற்சியில் இந்த விற்பனை நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.


இதன் மூலம் டெக்னோ குறூப் ஊழியர்களும், லங்கா டைல்ஸ் நிறுவன ஊழியர்களும்  வாடிக்கையாளர்களுக்கு மகத்தான திருப்திகரமான சேவைகளை வழங்க திடசங்கற்பம் பூண்டுள்ளனர்.


டெக்னோ குறூப் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று பணிப்பாளரும், புத்தளம் 80 ஸ் சஹீரியன்ஸ் ஹீரோஸ் அமைப்பின் நிறைவேற்று குழு உறுப்பினருமான எஸ்.எச்.எம்.ஜப்ரிஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக லங்கா டைல்ஸ் நிறுவன அபிவிருத்தி பிரிவு முகாமையாளர் ஜே.வீ.வேரகொட கலந்து கொண்டார்.


நிகழ்வினை ஆரம்பித்து வைப்பதற்காக ஹுதைபி ஹாபி கிறாஅத் ஓதியதையடுத்து தேசிய கீதம் இசைக்க, வரவேற்புரையை எஸ்.எச்.எம்.ஜப்ரிசும், விஷேட உரையினை ஜே.வீ.வேரகொடவும், நன்றியுரையினை அப்துர்ரஹ்மான் இர்ஷாதும் நிகழ்த்தினர்.


தொடர்ந்து விற்பனை நிலையம் அதிதிகளினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டு நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்விலும் சகலரும் கலந்து கொண்டனர்.





















No comments