புத்தளம் நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலையில் சித்தியடைந்த மாணவன் கௌரவிப்பு
(கற்பிட்டி செய்தியாளர் எம் எச் எம் சியாஜ்)
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் மீளாய்வு வெளியாகியுள்ள நிலையில் புத்தளம் நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலையில் மேலும் ஒரு மாணவனான முஹம்மது முபீக் மிர்சால் அஹமட் என்ற மாணவன் 138 புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளார்
சித்தியடைந்த மாணவனை கௌரவிக்கும் முகமாக புதன்கிழமை (12) பாடசாலையின் அதிபர் எம். வை. ஹுதைபா தலைமையில் இடம்பெற்ற விசேட கௌரவிப்பு நிகழ்வில் மேற்படி மாணவன் சான்றிதழ், பதக்கம், நினைவுச் சின்னம் மற்றும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்படதுடன் பாடசாலையின் பிரதி அதிபர் எம் ஆர் புவாஸ், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் ஏ.எம் எம் நஸ்மி மற்றும் உறுப்பினர் எம்சஹ்றூன் ஆகியோர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
No comments