கற்பிட்டியின் மூத்த அரசியல் செயற்பாட்டளரை சந்தித்த முஸ்லிம் காங்கிரஸ்
(நமது செய்தியாளர்)
இடம்பெற உள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கற்பிட்டி பிரதேச சபைக்கு இம்முறை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து மரச் சின்னத்தில் போட்டியிட உள்ள நிலையில் வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்கும் பணி மும்முரமாக இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் கற்பிட்டியின் மூத்த அரசியல் செயற்பாட்டாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஊடாக கற்பிட்டி பிரதேச சபையின் முன்னாள் உப தலைவரான எம் என்.எம்.எம் பசீரை அவரது இல்லத்தில் சந்தித்து கட்சியின் தேர்தல் செயற்பாடுகளை கற்பிட்டியில் எவ்வாறு மேற்கொள்வது தொடர்பாக விரிவாக கலந்துரையாடப் பட்டது.
இதில் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும் கட்சியின் கற்பிட்டி பிரதேச தேர்தல் நடவடிக்கைகளூக்கான இணைப்பாளருமான எஸ்.எச்.எம் நியாஸ், தில்லையடி பள்ளிவாசல் பேஷ் இமாம் றிப்கான் (றஹ்மானி) மற்றும் கற்பிட்டி பிரதேச சபையின் பள்ளியாவத்தை வட்டாரத்தில் மரச் சின்னத்தில் களம் இறங்கும் சமூக செயற்பாட்டாளர், மஹ்தி பவுண்டேஷன் நிறைவேற்று பணிப்பாளர், தொழிலதிபர் ஏ.ஆர்.எம் முஸம்மில் மற்றும் ஆனவாசல் வட்டாரத்தில் மரச் சின்னத்தில் களம் இறங்கும் சமூக செயற்பாட்டாளரும் கற்பிட்டியின் சிரேஷ்ட ஊடகவியலாளருமான எம்.எச்.எம் சியாஜ் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
No comments