புத்தளம் நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலையில் மேலும் ஒரு மாணவன் சித்தி
(கற்பிட்டி செய்தியாளர் எம் எச் எம் சியாஜ்)
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் மீளாய்வு வெளியாகியுள்ள நிலையில் புத்தளம் நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலையில் மேலும் ஒரு மாணவன் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளார்.
முஹம்மது முபீக் மிர்சால் அஹமட் என்ற மாணவன் 2024 ம் ஆண்டு தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையின் மீளாய்வு பெறுபேற்றின் மூலம் 138 புள்ளிகளை பெற்று சித்தியடைந்து பாடசாலைக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலையின் அதிபர் எம். எம். ஹுதைபா தெரிவித்தார்.
2024 தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் ஏற்கனவே எட்டு மாணவர்கள் சித்தியடைந்திருந்த நிலையில் இந்த மாணவனின் சித்தியுடன் புத்தளம் நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலையில் ஒன்பது மாணவர்கள் வெட்டு புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments