கருவலகஸ்வெவயில் பெண்களுக்காக குரல் கொடுத்த ஜெயவதி பெண்கள் தினத்தன்று மரணம்
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
புத்தளம் மாவட்ட முன்னாள் நெப்ஸோவின் செயற்பாட்டாளரும் கருவலகஸ்வெவ கிராமத்தில் பெண்களின் உரிமைக்காகவும் கிராமத்தின் எழுச்சிக்காகவும் தனது வாழ்வின் அதிகமான காலத்தை செலவிட்ட பெண்மணி ஜெயவதி தனது 70 வது வயதில் மகளீர் தினத்தன்று(08) காலமானார்.
அவரின் இறுதிச் சடங்கு திங்கட்கிழமை (10) கருவலகஸ்வெவ கிராமத்தில் இடம்பெற்றது.
இதில் புத்தளம் மாவட்ட நெப்ஸோவின் இணைப்பாளர் ஜே. பத்மநாதன் மற்றும் முன்னாள் நெப்ஸோவின் பெண்கள் வேலைத்திட்ட செயற்பாட்டாளர்கள் எம்.எசா.எம் சியாஜ், எம்.டி.எப் நப்ரா ஆகியோருடன் காலி மாவட்ட முன்னாள் நெப்ஸோவின் செயற்பாட்டாளர் இரேசாவும் கலந்து கொண்டனர்.
ஜெயவதியின் முயற்சியினால் உருவாக்கப்பட்ட சனசமூக நிலையத்திற்கு அவரின் பூத உடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதில் பெருந்திரலான மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியதுடன் அவரின் சமூக சேவைகளை பாராட்டி தமது நன்றி நவிலல்களையும் இக்கிராம மக்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது
No comments