Breaking News

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா சிநேகபூர்வ சந்திப்பு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட கரையோர பகுதிகளுக்கான அபிவிருத்தி குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவா அவர்களுடன் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் ஏற்பாடு செய்த சிநேகபூர்வ சந்திப்பொன்று நேற்றுமுன்தினம் இரவு சம்மேளன கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.


சம்மேளன உப தலைவர் அல்ஹாஜ் எம்.சீ.எம்.ஏ. சத்தார் (BSc BAd) தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வினை பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க். எம்.எம்.எம். இல்ஹாம் பலாஹி (BA) வழி நடாத்தினார்.


சம்மேளனம் தொடர்பான பொது அறிமுகம்,  அதனூடாக  முன்னெடுக்கப்படும் பணிகள் தொடர்பாக உப தலைவர் அல்ஹாஜ் எம்.சீ.எம்.ஏ. சத்தார் (BSc BAd) விளக்கியதுடன், இச் சந்திப்பின் நோக்கம் தொடர்பாகவும் எடுத்துரைக்கப்பட்டது.


மேற்படி சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன், நினைவுச் சின்னமொன்றும் வழங்கி வைக்கப்பட்டது.


அதனையடுத்து பாராளுமன்ற உறுப்பினரினால் பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய வகையில் விஷேட உரையொன்றும் நிகழ்த்தப்பட்டது.


காத்தான்குடி பிரதேசத்தில் அடையாளப் படுத்தப்பட்ட பிரச்சினைகள் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன், அதனை தீர்ப்பதற்கான வழிமுறைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.


சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பான விடயங்கள் பாராளுமன்ற உறுப்பினரினால் தெளிவுபடுத்தப்பட்டதுடன், ஐயங்களுக்கான தெளிவுகளும் வழங்கி வைக்கப்பட்டன.


சம்மேளன நிர்வாக சபை உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், புத்திஜீவிகள், அரச அதிகாரிகள், கல்வியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலரும் பங்குபற்றியிருந்தனர்.


புதிய அரசியலமைப்பு தொடர்பாக சம்மேளனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்ச்சியான செயற்பாடுகளின் அடுத்த கட்ட நகர்வாக இச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.












No comments