Breaking News

புத்தளம் லிவர்பூல் காற்பந்தாட்டக் கழகத்திற்கு உபகரணங்கள் கையளிப்பு.

எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் 2024 ம் ஆண்டின் பண்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து புத்தளம் மாவட்டத்தின் தெரிவு செய்யப்பட்ட  விளையாட்டுக்கழகங்கள் மற்றும் பாடசாலைகளுக்கு  விளையாட்டு உபகரணங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன.


புத்தளம் காற்பந்தாட்ட லீக்கில் அங்கத்துவம் பெற்றுள்ள கழகங்களுக்கும் விளையாட்டு பொருட்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன.


அந்த வகையில் புத்தளம் லிவர்பூல் காற்பந்தாட்ட கழகத்துக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் லிவர்பூல் கழகத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களிடம்  அண்மையில் அலி சப்ரி ரஹீமின் காரியாலயத்தில் வைத்து விளையாட்டு உபகரணங்களை கையளித்தார்.


இந்த விளையாட்டுப் பொருட்கள் புத்தளம் பிரதேச செயலகத்தினால் லிவர்பூல் கழகத்திற்கு வழங்கப்பட்ட போதிலும், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டவரின் கரங்களால் பெற்றுக் கொள்வது சிறந்த பண்பாகும் என கருதியே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமிடம் பெற்றுக்கொண்டதாகவும், நன்றி நவிலல் கடிதமும் ஒப்படைத்ததாகவும் லிவர்பூல் கழக நிர்வாகிகள் தெரிவித்தனர்.





No comments

note