புத்தளம் மன்பஹுஸ்ஸாலிஹாத் பெண்கள் அரபுக் கல்லூரியில் சுதந்திர தின நிகழ்வுகள்.
எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் மணல்குன்று மன்பஹுஸ்ஸாலிஹாத் பெண்கள் அரபுக் கல்லூரியில் 77 வது சுதந்திர தின நிகழ்வுகள் இனிதே நடந்தேறின.
கல்லூரி முதல்வர் அஷ்ஷெய்க், அல் ஹாபிழ் , அல் காரி ஏ.எம்.ரியாஸ் (தேவ்பந்தி) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலை அதிபர் ஐ.ஏ.நஜீம், கல்லூரியின் பரிபாலன சபை தலைவர் ஏ.எஸ்.எம்.ஜிப்ரிகான் ஆகியோர் கலந்து கொண்டனர். கல்லூரி ஆசிரியர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றிருநதனர்.
இந்நிகழ்வில் "தேசிய மறுமலர்ச்சிக்காக அணி திரள்வோம்" எனும் தலைப்பில் சாஹிரா தேசிய கல்லூரியின் அதிபர் ஐ.ஏ.நஜீம் விஷேட உரையாற்றினார்.
No comments