உடப்பில் கிளீன் ஶ்ரீலங்கா வேலைத்திட்டம்
(க.மகாதேவன்-உடப்பு)
கிளீன் ஶ்ரீலங்கா சிறந்த பண்பான வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்வதற்கான வேலைத் திட்டத்தில் உடப்பு பகுதியில் ஒரு பகுதி சுத்தம் செய்யப்பட்டது.உடப்பு கடற்கரைப் பிரதேசம் வெள்ளிக்கிழமை (14) இதன் போது சுத்தம் செய்யப்பட்டது.
எழில் மிகு கடற்கரைப் பிரதேசம் கவர்ச்சிகரமான சுற்றுலாப் பயணம் என்ற தொனிப் பொருளில் இந்த வேலைத்திட்டம் வெள்ளிக்கிழமை காலை முன்னெடுக்கப்பட்டது. முந்தல் பிரதேச செயலக செயலாளர் அவர்களின் தலைமையில், மத்திய சுற்றாடல் அதிகார சபை அத்துடன் உடப்பு பொலிஸார், உடப்பிலுள்ள மீன்பிடி சங்கங்கள், உடப்பு தமிழ் மகா வித்தியாலய மாணவ மாணவிகள் மற்றும் அதிபர் ஆசிரியர்கள், இந்து ஆலய பரிபால சபை, பெற்றோர்கள் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்தனர்.
அத்துடன் ஆராச்சிக்கட்டு பிரதேச சபைக்குச் சொந்தமான உழவு இயந்திரம் மூலம் பிளாஸ்ரிக் மற்றும் கண்ணாடிப் போத்தல்கள் சேகரிக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டது.
No comments