நாடளாவிய நிறைவேற்றுத் தர சேவையில் அடுக்கடுக்காக தொடர் வெற்றி.
எம்.யூ.எம். சனூன்
நாடளாவிய நிறைவேற்றுத் தர சேவையில் ஒன்றான இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கு (SLEAS) தெரிவான எம்.எம்.எம். சிராஜ் இலங்கை திட்டமிடல் சேவை(SLPS) பொது போட்டி பரீட்சையிலும் வெற்றி பெற்று நேர்முகப் பரீட்சைக்கு தெரிவாகி சாதனை வீரனாக தனது அடையாளத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
மதவாச்சியை பிறப்பிடமாகக் கொண்டவரும் தற்போது புத்தளத்தில் வசித்து வருபவருமான இவர் NIE இன் முன்னாள் விரிவுரையாளரும், தற்போதைய புத்தளம் சித்திரப்பாட சிரேஷ்ட ஆசிரிய ஆலோசகருமான கலாநிதி எம்.எம்.முஹம்மது அவர்களின் சகோதரியான எம்.எம். பாத்திமா பீவி ஆசிரியையின் மருமனும் ஆவார்.
இவர் புத்தளம் கல்பிட்டி திகழி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ICT பாட ஆசிரியராக 2019 முதல் தனது சேவையை வழங்கி வருகின்றார்.
தனது உயர் கல்வியை தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் பயின்றதுடன் முகாமைத்துவமும் தகவல் தொழில்நுட்பவியலில் வகுப்பு சித்தியுடன் விஞ்ஞானமானி பட்டத்தையும் தனதாக்கி கொண்டவருமாவார்.
தனது பட்டப்படிப்பின் பின்னர் மதவாச்சி பிரதேச செயலாளர் காரியாலயத்தில் கிராம உத்தியோகத்தராக தனது பணியை ஆரம்பித்து சிறிது காலத்தில் தனது சொந்த தேவையின் நிமித்தம் சேவை மாற்றம் பெற்று ICT பாட ஆசிரியராக கல்பிட்டி பிரதேசத்தில் ஆறு வருடங்களாக தனது பணியை தொடர்ந்து வருகிறார்.
பல அரச பொது போட்டி பரீட்சைகளில் தோற்றி எதிலும் தோல்வி காணாத இவருக்கு இலங்கையின் நிறைவேற்று சேவையின் இந்தப் போட்டி பரீட்சை பாடசாலை காலத்திலிருந்தே இலக்காக இருந்தது.
தான் இலங்கையின் நிறைவேற்றுத் தர சேவையின் உத்தியோகத்தராக வரவேண்டும் என்ற இலக்குடன் கல்வி பயின்றதுடன் தனது இலக்கை அடைவதில் வெற்றியும் அடைந்துள்ளார்.
No comments