புத்தளம், மதுரங்குளி புகையிரத நிலையத்தில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வும், மரநடுகையும்
ரம்யா லங்கா அமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பின் கனமூலை கிளை ஆகியவற்றின் கூட்டு அனுசரணையுடன் 77வது தேசிய சுதந்திர தின நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (4) காலை மதுரங்குளி புகையிரத நிலையத்தில் பெருமையுடன் கொண்டாடப்பட்டது.
குறிப்பாக, நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர் தியாகம் செய்த தேச மாவீரர்களை நினைவு கூரப்பட்டதுடன், நாட்டுக்கு சுபீட்சத்தை ஏற்படுத்தவும், நாட்டு மக்களின் கனவுகளை நனவாக்கவும், அதற்காக உழைக்கும் அனைவருக்கும் தேவையான பலம் கிடைக்க வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் மதுரங்குளிய புகையிரத நிலைய முன்னாள் நிலைய அதிபர் அனுர பத்திரன மற்றும் தற்போதைய நிலைய அதிபர் ரவிந்து ஆயிஷான் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இங்கு மதுரங்குளி புகையிரத நிலையத்தை சுற்றியுள்ள சூழல் சுத்தப்படுத்தப்பட்டதுடன் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியும் இடம்பெற்றது. மேலும் ரயிலில் பயணம் செய்வதற்காக வருகை தந்த பயணிகளையும் மகிழ்வித்து சுதந்திர தினத்தை கொண்டாடி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
No comments