கஹட்டோவிட்டவைச் சேர்ந்த அல்ஹாஜ் பிர்தௌஸ் JP விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்
(கஹட்டோவிட்ட ரிஹ்மி ஹக்கீம்)
நேற்றைய தினம் (26) மனித உரிமைகள் மக்கள் பாதுகாப்பு அமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில் கஹட்டோவிட்ட பிரதேசத்தை சேர்ந்த அல்ஹாஜ் பிர்தவ்ஸ் JP விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
பிராந்தியத்தில் பல்வேறு சமூக பணிகளில் பல வருடங்களாக தொடர்ச்சியாக ஈடுபட்டு வரும் பிர்தௌஸ் JP அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் பேரவை (YMMA) கஹட்டோவிட்ட கிளை தலைவரும் ஆவார்.
இந்நிலையில் மனித உரிமைகள் மக்கள் பாதுகாப்பு அமைப்பின் (Human rights organisation for security people) விருது வழங்கும் நிகழ்வில் அவரது சமூக பணிகளுக்காக "சமூக சேவை விருது" (Social service award) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
No comments