Breaking News

கற்பிட்டி தமிழ் கலை இலக்கிய மன்றத்தின் இவ்வார கலைஞர் மற்றும் ஆளுமை அறிமுகம் நேரலையில் கற்பிட்டியின் முதுசம் ஆப்தீன்

கற்பிட்டி தமிழ் கலை இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் வெள்ளிக்கிழமை தோறும் இரவு 8.30 மணிக்கு முகநூல் ஊடாக நேரலையாக இடம் பெறும் வெள்ளி மலர்கள் - கலைஞர் மற்றும் ஆளுமை அறிமுகம் நிகழ்ச்சியில் இவ்வாரம் கற்பிட்டி பெரியகுடியிருப்பைச் சேர்ந்த  ஓய்வு பெற்ற பிரதி அதிபரும், முதியோர் சங்கத்தின் பொருளாளரும், கற்பிட்டியின் வரலாற்று பொக்கிஷமாகவும் திகழும் எஸ் எம் எஸ் ஆப்தீன் கலந்து சிறப்பிக்க உள்ளார் 


கற்பிட்டி வரலாற்றில் முதன் முறையாக வாராந்த முகநூல் நேரலை நிகழ்வாக ஆரம்பிக்கப்பட்டுள்ள வெள்ளி மலர்கள் எனும் கலைஞர் அறிமுகம்  நிகழ்ச்சி சகல தரப்பினரையும் கவர்ந்துள்ளதுடன்  பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.


மேற்படி வெள்ளி மலர்கள் எனும் கலைஞர் அறிமுகம் முகநூல் நேரலை நிகழ்ச்சியினை மன்றத்தின்  நிர்வாகக் குழு உறுப்பினர் அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம் அஸ்கர் தொகுத்து வழங்குவதுடன் நேரலையினை கற்பிட்டியின் முகநூல் ஊடகவியலாளர் றிஸ்வி ஹூசைன் மேற்கொள்வதுடன் நெறிப்படுத்தல் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை  தலைவர் எஸ்.எம் அருஸ், உப தலைவர் எம்.எம்.எம் நவ்ப், செயலாளர் எம்.எச்.எம் சியாஜ் மற்றும் நிர்வாக உறுப்பினர் எஸ் சுப்ரமணியம் வழங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ் - றிஸ்வி ஹூசைன், புத்தளம் எம் யூ எம் சனூன்)




No comments

note