கற்பிட்டியில் இடம்பெற்ற செடோ தொலைக்காட்சி அறிமுகமும் கிளீன் ஸ்ரீ லங்கா குறுந்திரைப்பட போட்டியும்
(கற்பிட்டி நிருபர் சியாஜ் - றிஸ்வி ஹூசைன்)
கற்பிட்டி செடோ ஸ்ரீ லங்காவின் மற்றுமோர் முயற்சியாக செடோ தொலைக்காட்சி அறிமுகமும் அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தை மையப்படுத்தி கிளீன் ஸ்ரீ லங்கா என்ற கருப்பொருளில் குறுந்திரைப்பட போட்டியின் ஆரம்ப நிகழ்வு சனிக்கிழமை (25) செடோ ஊடகப் பிரிவின் ஏற்பாட்டில் செடோ ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் பணிப்பாளர் ஏ. ஆர் முனாஸ் தலைமையில் செடோ ஸ்ரீ லங்காவின் தலைமையகத்தில் இடம்பெற்றது.
மேற்படி நிகழ்வில் சமூக செயற்பாட்டாளர் மஞ்சுளா கேஷவமூர்த்தி , செடோ ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் ஆலோசணைக் குழு உறுப்பினர் டி.எல்.எம் மகீன், கற்பிட்டி கலை இலக்கிய மன்றத்தின் தலைவர் எஸ்.எம் அருஸ், தொழிலதிபர் ஏ.ஆர்.எம் முஸம்மில், அபிவிருத்தி உத்தியோகத்தரும் அகில இலங்கை சமாதான நீதவானுமாகிய ஏ.ஆர்.எம் அஸ்கர், சமூக செயற்பாட்டாளர் சபுறுல்லாஹ், சமூக ஊடகவியலாளர் எஸ்.எம் றிஸ்வி ஹூசைன் ஆகியோருடன் செடோ ஸ்ரீ லங்கா நிர்வாக பொறுப்பாளர் ஏ.ஆர்.எம் ஹாபிஸ் , செடோ ஸ்ரீ லங்கா ஊடாக இணைப்பாளர் சன்ஹீர் சஜான், செடோ ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் நிர்வாக மேற்பார்வையாளர் எஸ்.எப் சுஜானா ஆகியோரும் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
No comments