குருதிக் கொடை நிகழ்வு
பாறுக் ஷிஹான்
கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் 125 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சனிக்கிழமை(25) மாபெரும் இரத்ததான முகாம்( குருதிக்கொடை ) நடைபெற்றது.
கல்முனை ஆதார வைத்தியசாலையுடன் இணைந்து காலை 8.00 மணி முதல் மாலை 4.30 மணிவரை பாடசாலை வளாகத்தில் இரத்ததான முகாம் நடைபெற்றதுடன் இந்நிகழ்வினை கல்லூரி அதிபர் அருட் சகோதரர் ரெஜினோல்ட் ஆரம்பித்து வைத்தார்.
அத்துடன் இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் கலந்து சிறப்பித்ததுடன் கௌரவ அதிதியாக கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி மருத்துவர் நடராஜா றமேஸ் மற்றும் விசேட அதிதியாக வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பாளர் மருத்துவர் திருமதி பி.எம்.கவிதா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
மேலும் கார்மேல் பற்றிமாவின் 125 ஆவது நிறைவு நிகழ்வு நிறைவேற்றுக்குழுவினரின் பங்கேற்புடன் குறித்த நிகழ்வு மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
125 ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் பல நிகழ்வுகள் ஒரு வருடத்திற்கு மாதாந்தம் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments