Breaking News

புத்தளம் ஆண்டிமுனை ஸ்ரீ கிருஷ்ணா தமிழ் வித்தியாலயத்தில் நால்வர் சித்தி

 (க.மகாதேவன்)

அண்மையில் வெளியான (2024) ஐந்தாந்தர புலமைப் பரிசில் பரீட்சையில் புத்தளம் தெற்குக் கல்விக் கோட்டத்திற்குட்பட்ட ஆண்டிமுனை ஶ்ரீ கிருஷ்ணா தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்ற நான்கு மாணவர்கள் சித்தியடைந்து பாடசாலைக்கும், பாடசாலை சமூகத்துக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.


இவர்களை அதிபர் திரு.எஸ்.கோகிலகாந்தன் மற்றும் கற்பித்த ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் ஆகியன பாராட்டைத் தெரிவித்துள்ளது.


மாணவர்களின் பெயர் விபரம்


செல்வன்:அ.யோகீர்த் (153)

செல்வி:கே.ஹரிதுவாரஹா (151)

செல்வி:டி.அட்ஷயா (144)

செல்வி:எஸ்.மிகேலா (139)




No comments

note