Breaking News

கலைச்சுடர் விருதை பெற்றுக் கொண்ட இளம் ஊடகவியலாளர் முஹம்மட் இல்ஹாம்

லக்ஸ்டோ ஊடக வலையமைப்பின் 28ஆவது ஆண்டு நிறைவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட திறமைக்கான தேடல் தொனியில் இடம்பெற்ற 100 கலைஞர்களை கெளரவிக்கும் நிகழ்வு அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள காரைதீவு கலாச்சார மண்டபத்தில் கலாநிதி அன்ஸார் ஜே.பி. தலைமையில் கடந்த (25) சனிக்கிழமை  இடம்பெற்றது.


நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட பல்துறை கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்த இந்நிகழ்வில் புத்தளத்தைச் சேர்ந்த இளம் ஊடகவியலாளர் முஹம்மட் இல்ஹாம் அவர்கள் கலைச்சுடர் விருதைப் பெற்றுக் கொண்டார்.


இவர் கடந்த ஆண்டு கலைதீபம் விருதையும் பெற்றுக் கொண்டமை  குறிப்பிடத்தக்கது. மேலும் அறிப்பளராகவும், எழுத்தாளராகவும் பல விருதுகளைப் பெற்றுள்ளார்.


இவ்விழாவிற்கு விசேட அதிதியாக ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த உமாலினி ஜகராஜன் மற்றும் சிறப்பு அதிதிகளாக ஏ.எல் தெளபீக் (மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் - அம்பாறை மாவட்டம்), மேலதிக அரசாங்க அதிபர் ஜகராஜன், தமிழ் மருதமாமனி பீர் முஹம்மட், ஊடகவியலாளர்கள், கல்விமான்கள், கலை இலக்கியவாதிகள் என்றும் பலரும் கலந்து கொண்டனர்.


இவ்விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.


மேலும், இவ்விழாவை அலங்கரிக்க பல கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதோடு, இதனைக் கண்டு களிக்க விருது பெற்றவர்களின் குடும்பஸ்தர்களும், நலன் விரும்பிகளும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.






No comments

note