JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி பிரதேச சபையின் ஏற்பாட்டில் கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் கற்பிட்டி பிரதான பாதையின் சிரமதான பணி

(கற்பிட்டி நிருபர் சியாஜ், புத்தளம் எம் யூ எம் சனூன்)

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஊடாக கற்பிட்டி பிரதேச சபையினால் முன்னெடுக்கப்படும் கற்பிட்டி தொடக்கம் பாலாவி வரையான பிரதான பாதையின் இரு ஓரங்களில் பாரிய சிரமதான வேலைத்திட்டம் செவ்வாய்க்கிழமை (28) நுரைச்சோலை பொருளாதார மத்திய நிலையத்தில் கற்பிட்டி பிரதேச சபையின் செயலாளர் மங்கல ராமநாயக்க தலைமையில் அரம்பிக்கப்பட்டது.


இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம் ஜே.எம் பைசல், தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் நிமல் பத்திரண, கற்பிட்டி கடற்படைத் தளபதி, கற்பிட்டி , கண்டக்குளி சிவில் பாதுகாப்பு பிரிவினர், நுரைச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள். கற்பிட்டி பிரதேச செயலாளர், உட்பட உத்தியோகத்தர்கள், கற்பிட்டி பிரதேச சபை உத்தியோகத்தர்கள், சமூக சேவை அமைப்புக்களின் பிரதிநிதிகள், விளையாட்டு கழக வீரர்கள், நலன்விரும்பிகள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர். 


கற்பிட்டி தொடக்கம் பாலாவி வரையிலான பிரதான வீதியின்  இரண்டு பக்கங்களையும் சிரமதானம் மூலம்  துப்புரவு செய்தல் வேலைத்திட்டத்திற்கு  நுரைச்சோலை பொருளாதார மத்திய நிலையத்தில் இரு குழுக்கள் பிரிக்கப்பட்டு நுரைச்சோலையிலிருந்து பாலாவி வரை வீதியோர சிரமதான பணியை மேற்கொள்வதற்கு ஒரு குழுவும் மற்றைய குழு நுரைச்சோலையிலிருந்து கற்பிட்டி வரை வீதியோர சிரமதான பணிகளை மேற் கொண்டமை குறிப்பிடத்தக்கது.









Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال