Breaking News

புத்தளம் நுஸ்கி பவுண்டேஷன் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்கி வைத்தது.

எம்.யூ.எம்.சனூன், எம்.எச்.எம்.சியாஜ்

புத்தளம் நகரில் பல்வேறு சமூக சேவை பணிகளில் தொடராக இயங்கி வருகின்ற புத்தளம் நுஸ்கி பவுண்டேஷன் கடந்த வருடங்களை போன்று இம்முறையும்  மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைத்துள்ளது.


இந்த நிகழ்வை நுஸ்கி பவுண்டேஷன் தலைவரான சமூக ஆர்வலர் எம்.என்.எம்.நுஸ்கி ஏற்பாடு செய்திருந்தார்


புத்தளம் வடக்கு, பெரிய பள்ளி குடியிருப்பு, புதுக்குடியிருப்பு ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளில் வதியும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கே இந்த கற்றலுக்கான உபகரணங்கள்  வழங்கப்பட்டன.


பாலர் பாடசாலை மாணவர்கள் மற்றும் தரம் 1 தொடக்கம் உயர்தரம் வரை கல்வி பயிலும் மொத்தமாக 175 மாணவர்களுக்கு இந்த பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.


புத்தளம் மஸ்ஜித் வீதியில் அமைந்துள்ள நுஸ்கி பவுண்டேஷன் காரியாலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்விலே மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.









No comments

note