Breaking News

கற்பிட்டியில் பதிவு செய்யப்படாத பாலர் பாடசாலைகள் இவ்வருட இறுதியில் மூடப்படும் - சந்தியா பிரியதர்ஷினி -

(கற்பிட்டி நிருபர் சியாஜ், புத்தளம் நிருபர் சனூன்)

கற்பிட்டி பிரதேசத்தில் தமிழ் மற்றும் சிங்கள மொழி மூல பாலர் பாடசாலைகள் 89 காணப்படுகின்றது. எனினும் இதில் 47 பாலர் பாடசாலைகள் மாத்திரமே கல்வி தகைமைகளை பூர்த்தி செய்த ஆசிரியர்களுடன் இயங்குவதாகவும் அத்தோடு பதிவும்  மேற்க்கொள்ளப்பட்டுள்ளதாக தனக்கு அறிக்கிடைத்துள்ளது.  என  கற்பிட்டி பிரதேசத்தில் உள்ள பாலர் பாடசாலை ஆசிரியர்களுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்ட  கற்பிட்டி பிரதேச உதவி செயலாளர் சந்தியா பிரியதர்ஷினி உரையாற்றும் போது தெரிவித்தார்.


இந் நிகழ்வு கற்பிட்டி பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் கற்பிட்டி உதவி பிரதேச செயலாளர் சந்தியா பிரியதர்ஷினி தலைமையில் புதன்கிழமை (22) இடம்பெற்றது இதில் கற்பிட்டி பிரதேச செயலக பாலர் பாடசாலை பொறுப்பதிகாரி எச்.ஏ நிப்ராஸ், கற்பிட்டி பிரதேச சபையின் பாலர் பாடசாலை பொறுப்பதிகாரி ரூபீகா ஆகியோர் கலந்து கொண்டனர்.


அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் ; 


எனவே கற்பிட்டி பிரதேசத்தில் உள்ள பாலர் பாடசாலை அசிரியர்களின் கற்கை நெறி தகைமைகள் தொடர்பாகவும் பதிவு செய்யப்படாதுள்ள பாலர் பாடசாலைகள் தொடர்பாகவும் எதிர்வரும் காலங்களில் கூடிய கவனம் செலுத்தப்படுவதோடு 2026 ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இவ்வாறு கல்வித் தகைமை மற்றும் பதிவுகள் மேற் கொள்ளாத கற்பிட்டி பிரதேசத்தில் காணப்படும் சகல பாலர் பாடசாலைகளையும் மூடுவதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும்.  எனவும்  இந்த விடயங்களை எமது பிரதேச பாலர் பாடசாலை ஆசிரியர்கள் கவனத்நில் கொண்டு சேவையாற்றுவதுடன் வினை திறன் மிக்க பாலர் பாடசாலைகளை கற்பிட்டி பிரதேசத்தில் உருவாக்குவதற்கு சகலரினதும் ஒத்துழைப்புக்களையும் வழங்க வேண்டும். 


அத்தோடு கற்பிட்டி முகத்துவார தீவுப் பகுதியில் நீண்டகாலமாக மூடப்பட்டிருந்த தமிழ் மொழி பாலர் பாடசாலையை கிராம உத்தியோகத்தரின் முழுமையான முயற்சியுடன் வேல்ட் விஷன் நிறுவனத்தின் உதவியுடன் எதிர்வரும் பெப்ரவரி 05 ம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளது. என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதுடன்   சகல பாலர் பாடசாலை ஆசிரியர்களும் இதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கோரிக்கை விடுத்தார்.






No comments

note