உடப்பு கரைவலையில் வெண்பாரை மீன்கள் இரண்டாவது முறையாக பிடிப்பு!.
(உடப்பு க.மகாதேவன்)
உடப்பு கரைவலையில் சனிக்கிழமை (21) வெண்பாரை மீன்கள் இரண்டாவது முறையாக பிடிக்கப்பட்டது.
இவை உடப்பு கடற்பரப்பிலுள்ள நரிப்பலம் பகுதியில், உடப்பு கரைவலைக்குச் சொந்தமானவரின் கரைவலைப் பாட்டில் பகல் பிடிக்கப்பட்டு, பின்னர் உடப்புலுள்ள மீன் வாடிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு விற்பனைக்கு ஏலத்தில் விடப்பட்டது.
ஒரு மீன் 5கிலோ தொடக்கம் 8கிலோ வரை காணப்பட்டதோடு , ஒரு கிலோ 1100 வரை விற்பனை செய்யப்பட்டது. இவை கொழும்புக்கு ஏற்றுமதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments