Breaking News

கற்பிட்டி அந்நூர் பாலர் பாடசாலையின் வருடாந்த கலைவிழா

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

கற்பிட்டி அந்நூர் பாடசாலையின் 31 வது வருடாந்த சிறுவர் கலை விழா நிகழ்வு வியாழக்கிழமை (5) கற்பிட்டி சியாப் திருமண மண்டபத்தில் அந்நூர் இளைஞர் கழகத்தின் தலைவர் எஸ்.ஏ.எம் நியாஸ்தீன் தலைமையில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.


இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக   ஓய்வு பெற்ற கோட்டக் கல்வி பணிப்பாளர் எஸ்.டி எம் பைறுஸமான் கலந்து கொண்டதுடன் விசேட அதிதிகளாக  கற்பிட்டி தில்லையூர் பாடசாலையின் அதிபர் எஸ்.எம் அருஸ், அல் ஹிறா பாடசாலையின் அதிபர் எம் எம்.எம் நவ்ப் மற்றும் செடோ சிறீ லங்கா நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஏ.ஆர்.எம் முனாஸ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.


கற்பிட்டி அந்நூர் பாலர் பாடசாலை சிறார்களின் கலைத் திறமைகள் வெளிப்படும் வகையில் சகல கலை நிகழ்வுகளும் மிகவும் நேர்த்தியாகவும் அழகான முறையில் வடிவமைக்கப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்ததுடன் இதற்கான ஏற்பாடுகளை அந்நூர் பாடசாலையின் அதிபர் அருஸியா தலைமையிலான ஆசிரியர் குழாம் மேற்க் கொண்டதாகவும்  பெற்றோர்களின் பங்களிப்பும் முழுமையாக வழங்கப்பட்டதாகவும் அந்நூர் இளைஞர் கழகத்தின் செயலாளர் ஏ.எம் நாசர் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.












No comments

note