Breaking News

நுஹா பாலர் பாடசாலையின் சிறுவர் விளையாட்டுப் போட்டி

புதுக்குடியிருப்பு, மதீனா லேன் நுஹா பாலர் பாடசாலையின் வருடாந்த சிறுவர் விளையாட்டுப் போட்டி டிசம்பர் மாதம் 20ம் திகதி வெள்ளிக்கிழமை பாலர் பாடசாலையின் ஆசிரியை ஏ. எஸ்.எப். மர்ஸுக்கா அவர்களின் தலைமையில் புளிச்சாக்குளம் உமர் பாரூக் மகா வித்தியாலய மைதானத்தில் காலை 8.00 மணிக்கு ஆரம்பமானது.


பாலர் பாடசாலை சிறார்களின் தமது   திறமைகளை ஓட்டம், வரைதல், கணித அறிவு, இன்னும் பல நிகழ்ச்சிகளை கொண்டு  குறித்த  விளையாட்டுப் போட்டி  இடம் பெற்றது.


 நிகழ்வில் பாலர் பாடசாலை அதிபர், ஆசிரியைகள்  பிரதம அதிதியாக புளிச்சாக்குளம் உமர் பாரூக் பாடசாலை அதிபர் எம்.யூ.எம். ஷரீக் (கபூரி,BA) அவர்களும் பிரதி அதிபர்களான எஸ். நஸுர்தீன் ஆசிரியர் , எஸ். எஸ். எம். முபீன் ஆசிரியர் மற்றும் பெற்றோர்கள் நலன் விரும்பிகள் என அதிகமானவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்


சிறுவர்களின் அறிவு ஆற்றலை மேம்படுத்தி செயற்பாட்டு திறன்மிக்கதாக கொண்டு வரும் நோக்கோடு இவ்விளையாட்டுப் போட்டி வருடா வருடம்  நடைபெற்று வருவதாகவும் இதற்கான பூரண ஒத்துழைப்புக்களை பெற்றோர்களுடன் இணைந்து எமது பாலர் பாடசாலையின் ஆசிரியர்களான ஏ. எஸ். இஸ்ஸத், ஏ.எப். அப்ரா,  ஆகியோர்  வழங்கி வருகின்றதனையும் பாடசாலை அதிபர் சுட்டிக்காட்டியதோடு இப் பாலர் பாடசாலையில் கல்விச் சுற்றுலா, Electrostatic வகுப்புகள், தரம் முதலாம் ஆண்டு செல்வதற்கான பிள்ளைகளை தயார் படுத்தல் என பூரண பயிற்சிகளையும் வழங்குவதாகவும் குறிப்பிட்டதோடு பங்கு பற்றி வெற்றி பெற்ற மற்றும் அனைத்து சிறார்களுக்கும் கிண்ணங்கள் பரிசுகள் அனைத்து வழங்கிவைக்கப்பட்டது.


புளிச்சாக்குளம்,புதுக்குடியிருப்பு என்.எம். (கபூரி,JP)


















No comments

note