உடப்பூரைச் சேர்ந்த திரு.பெ.வீரசுந்தரேஸ்வரன் எழுதிய இருநூல்கள் வெளியீடு
(உடப்பு க.மகாதேவன்)
கவிஞரும், எழுத்தாளருமான "கலாதினி" விருது பெற்ற உடப்பூரைச் சேர்ந்த திரு.பெ.வீரசுந்தரேஸ்வரன் அவர்கள் எழுதிய “உடப்பூரின் சித்திரைச் செவ்வாய்” “வீராவின் மரபுக் கவிதை“ ஆகிய இரண்டு நூல்களின் வெளியீடு உடப்பு இந்து கலாசார மண்டபத்தில் வெள்ளிக்கிழமை இன்று (20) இடம்பெற்றது.
இதன் போது இந்து ஆலய பரிபாலன சபைத்தலைவர் திரு.க.சின்னராசா, ஓய்வு பெற்ற ஆசிரியர் நிருபர் க.மகாதேவன் மற்றும் கலைஞர்களும், அதிபர்கள், ஆசிரியர்கள், மற்றும் கிராம அலுவலர்கள், ஓய்வு பெற்ற அதிபர்கள் ஆசிரியர்கள் போன்றோர் கலந்து சிறப்பித்தனர்.
நூலின் முதற்பிரதியை உடப்பு ஶ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத ஶ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் திரௌபதியம்மன் ஆலய பிரதம குரு சிவஶ்ரீ பஞ்சாட்சரக் குருக்கள் பெற்றுக் கொண்டார்.அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் நூலின் பிரதிகளைப் பெற்றுக் கொண்டனர்.
உடப்பூரின் சித்திரைச் செவ்வாய் நூலின் ஆய்வுரையை உடப்பு தமிழ் மகா வித்தியாலய அதிபர் திரு.பூ.சுகந்தன் நடத்தினார். அத்துடன் “வீராவின் மரபுக் கவிதை “நூலின் ஆய்வுரையை “கலாபூஷணம் “திரு.வை. இராமச்சந்திரன் அவர்கள் நடத்தினார்.
இதன்போது வாழ்த்துரை, தலைமை உரைகளை ஓய்வு நிலை அதிபர் திரு.வி. நடராஜா, முன்னாள் அதிபர் திரு.மு. சொக்கலிங்கசாமி ஆகியோர் ஆற்றினார்கள். உடப்பு கிராம அலுவலர் திரு.வை.சிவக்காந்த் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
No comments