Breaking News

புத்தளம் கரைத்தீவு பாடசாலையில் இடம்பெற்ற மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ். புத்தளம் எம் யூ எம் சனூன்).

புத்தளம் வை.எல் டீ. பீ ( YLDP) தன்னார்வ தொண்டர் குழுவின் ஏற்பாட்டில் கரைத்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (08) பாடசாலையின் அதிபர் ஏ.கே நைமுல்லாஹ் தலைமையில் பிரதி அதிபர் ஏ.சீ.எஸ் பர்சீனின் நெறிப்படுத்தலில் மாணவர்களுக்கான தலைமைத்துவ  பயிற்சி தொடர்பான ஒரு நாள் செயலமர்வு பாடசாலையில் இடம்பெற்றது.           


 இச் செயலமர்வின் விரிவுரைகள்  புத்தளம் தன்னார்வ தொண்டர் குழுவான வை எல் டீ.பீ (YLDP) யின் செயற்பாட்டாளர்களால் வழங்கப்பட்டதுடன் கரைத்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் மாணவர் தலைவர்கள் மற்றும் வகுப்புத் தலைவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என சகலரும் கலந்து கொண்டதாக வை.எல்.டீ.பீ ( YLDP) யின் தலைவர் ஐ. அஸ்ரிக் தெரிவித்தார்.









No comments

note